Posted by ஆஷிக் மிஸ்பாஹி | 0 comments

மெய்ஞானத்தை அடைய வழி?

அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் நாம் அவனோடு இருக்கிறோம் இதை அறிந்து உணர்ந்து அனுபவித்து வாழ்வது தான் மெய்ஞான வாழ்க்கை. ஒருவர் எல்லாம் பெற்றார் ஆனால் மெய்ஞானம் பெறவில்லை என்றால் அவர் எதையும் பெறாதவரைப் போனாறாவார். இன்னொருவர் மெய்ஞானம் பெற்றார் வேறெதையும் பெறவில்லை என்றாலும் அவர் எல்லாமும் பெற்றவரைப் போன்றவர் என்று இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

மெய்ஞானம் இல்லாத மனிதன் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற இயலாது. மேலும் அல்லாஹ்வின் உஜுத் எனும் உள்ளமையிலும் சிபாத் எனும் தன்மைகளிலும் அல்லாஹ்வுடன் கூட்டாகி ஷிர்க்கே கஃபிய்யி செய்கிறான்.

அதனால் தான் யார் மார்க்கச் சட்ட திட்டங்களைப் படித்துவிட்டு மெய்ஞானம் படிக்கவில்லையோ அவர் ஜின்தீக் வழிகெட்டவராகிவிட்டார். யார் மெய்ஞானம் படித்துக் கொண்டு போதுமான அளவுக்கு மார்க்கச் சட்டதிட்டங்களைப் படிக்கவில்லையோ அவர் பாவியாகிவட்டார் என இமாம் மாலிக் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். அல்மிர்காத் ஷரஹுல் மிஷ்காத்

அல்லாஹ் நம்மோடு மட்டுமல்ல, சகல சிருஷ்டிகளோடும் இருக்கிறான் என்பதை அல்குர்ஆன் மீண்டும் மீண்டும் பேசுகிறது. அல்லாஹ்வுடைய உஜுத் எனும் உள்ளமையில் தான் சகல வஸ்துக்களும் காட்சியளிக்கின்றன. எல்லா சிருஷ்டிகளையும் அவனே தன் உஜுத் எனும் உள்ளமையில் காட்டுகிறான். என்று விளங்குவதே மெய்ஞானம்

காகிதமும் எழுத்தும் ஒரே இடத்தில் இருந்தாலும் இரண்டும் ஒன்றல்ல வெவ்வேறுதான். இரண்டும் எவ்வளவு காலம் சேர்ந்திருந்தாலும் ஒன்று மற்றொன்றாக ஆகாது. காகிதம் காகிதம் தான். எழுத்து எழுத்து தான். அது போன்று அல்லாஹ் நம்மோடு இருந்தாலும் அவனும் நாமும் வேறு வேறுதான். ஒன்றல்ல . நாம் அவனாக முடியாது. அவன் நாமாக முடியாது. அடுத்து, எழுத்து இல்லாவிட்டாலும் காகிதம் இருக்கும். ஆனால், காகிதம் இல்லாமல் எழுத்து இருக்க முடியாது. அது போன்று நாம் இல்லாமலேயே அவன் இருப்பான். ஆனால், அவனுடைய தயவு இல்லாமல் நாம் இல்லை. ஏன் சகலகோடி சிருஷ்டிகளும் இல்லை. இத்தகைய இல்மையே சூஃபியாக்கள் தஸவ்வுப் என்னும் மெய்ஞானம் என்று கூறுகிறார்கள். இத்தகைய மெய்ஞானத்தைப் பெற்று அல்லாஹ்வின் அன்பிற்கும், அருளுக்கும் பாத்திரமானவராக நாம் ஆகவேண்டுமென்றால் ஒரு இறைநேசரின் தொடர்பு இல்லாமல் சாத்தியமில்லை. காகிதம் தூக்கி எறியப்படுகிற குப்பைகளாக மாறுகினறன. ஆனால் அதே காகிதம் குப்பயில் இருந்தாலும் கண்டெடுத்து, சுத்தம் செய்து, அத்தர் பூசி உயர்ந்த இடத்தில் வைக்கப்படும். அக்காகிதத்தில் குர்ஆன் ஆயத் எழுதப்பட்டிருந்தால், எந்தக் கல்லையும் நம் கண்களால் ஒத்துவது கிடையாது. ஆனால் அதுவே ஹஜருல் அஸ்வதாகவோ, கஃபாவுடைய கல்லாகவோ ஆகியருந்தால் நம் உதடுகளால் முத்தமிடுகிறோம், கண்களால் ஒத்துகிறோம். எங்கிருந்து இந்த கல்லுக்கும், காகிதத்திற்கும் இவ்வளவு சிறப்பு வந்தது. அதனுடைய சுயபுறத்திலிருந்தா? கண்டிப்பாக இல்லை. அந்தக் கல்லுக்கு கஃபாவோடு இருந்த தொடர்பும், காகிதத்திற்கு குர்ஆனோடு இருந்த தொடர்புமே இத்தகு கண்ணியத்தை பெற்றெடுத்து தந்தது . இது போன்று நம் நல்லோர்களாகிய வலிமார்களோடு தொடர்பு கொண்டால் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை பெறுவோம்

வலிமார்களின் தொடர்பின் அவசியத்தைப் பற்றி குர்ஆனும் ஹதீஸ்களும் இமாம் பெருமக்களும் அநேக இடங்களில் பேசியுள்ளனர்.


)) قال تعالى: ((يا أيها الذين آمنوا اتّقوا اللهَ وكُونوا معَ الصادقين

ஈமான் கொண்டார்களே நீங்கள் உண்மையாளருடன் சேர்ந்து கொள்ளுங்கள் .

இங்கு உண்மையாளர் என்று குறிப்பிடப்படுவது நல்லோர்கள்.

فقالَ صلى الله عليه وسلم ((إِنَّمَا مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالْجَلِيسِ السَّوْءِ كَحَامِلِ الْمِسْكِ وَنَافِخِ الْكِيرِ، فَحَامِلُ الْمِسْكِ إِمَّا أَنْ يُحْذِيَكَ وَإِمَّا أَنْ تَبْتَاعَ مِنْهُ وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ رِيحاً طَيِّبَةً، وَنَافِخُ الْكِيرِ إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ وَإِمَّا أَنْ تَجِدَ رِيحاً خَبِيثَةً)). رواه البخاري ومسلم
இந்த ஹதீஸில் பெருமானார் ஸல் அவர்கள் நல்ல கூட்டாளிக்கும் தீய கூட்டாளிக்கும் மத்தியிலுள்ள வேறுபாட்டை ஓர் அழகான உவமையின் மூலம் விளக்குகிறார்கள். நல்ல கூட்டாளி என்பவரை கஸ்தூரியை சுமப்பவனுக்கும் தீய கூட்டாளியை கொல்லம் பட்டரையில் உலையினை ஊதுபவனும் ஒப்பிடுகிறார்கள். ஒன்று கஸ்தூரியை நாம்  வாங்குவோம், வாங்கிவிட்டாலும் அதன் நற்மனம் நம்மில் வீசும். ஆனால் உலையை ஊதுபவனுக்கு அருகில் இருந்தால் நாம் உடுத்தியிருக்கிற உடை கிழியிம் என்ற பெருமானாரின் உவமானத்திலிருந்து நல்லோர்களுடன் சேர்ந்து இருக்கவேண்டிய முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.
قال تعالى((الْأَخِلَّاء يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ..
அந்த நேரத்தில் (கியாமத் நாளில்) தோழர்களில் சிலர் சிலருக்கு எதிரியாகி இருப்பர் இறையச்சம் உடையவர்களை தவிர
وَكَلْبُهُم بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ
அவர்களுடைய நாய் வாசலில் தன்னுடைய இரு முன்னங்கால்கலையும் விரித்து அமர்ந்து இருந்தது.

வலிமார்களின் தொடர்பைப் பற்றி இமாம் கஸ்ஸாலி ரஹ்

قال حجة الاسلام الغزالى (مما يجب في حق سالكِ طريق الحق أن يكون له مرشدٌ ومربٌّ ليدله على الطريق، ويرفع عنه الأخلاق المذمومة، ويضع مكانها الأخلاق المحمودة، ومعنى التربية أن يكون المربي كالزارع الذي يربي الزرع، فكلما رأى حجراً أو نباتاً مضراً بالزرع قلعه وطرحه خارجاً، ويسقي الزرع مراراً إلى أن ينمو ويتربى، ليكون أحسن من غيره ؛ وإذا علمت أن الزرع محتاج للمربي، علمت أنه لا بد للسالك من مرشد البتة، لأن الله تعالى أرسل الرسل عليهم الصلاة والسلام للخلق ليكونوا دليلاً لهم، ويرشدوهم إلى الطريق المستقيم ؛ وقبل انتقال المصطفى عليه الصلاة والسلام إلى الدار الآخرة قد جعل الخلفاء الراشدين نواباً عنه ليدلوا الخلق إلى طريق الله ؛ وهكذا إلى يوم القيامة، فالسالك لا يستغني عن المرشد البتة

அபுதர் ரலி அவர்களின் கூற்று.

قال أبو ذر: لقد تركنا رسول الله صلى الله عليه وسلم وما يحرك طائر جناحيه في السماء إلا ذكر لنا منه علماً.
ஆகாயத்தில் பறக்கின்ற பறவையினுடய அசைவிலிருந்தும் பெருமானார் எங்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். என அபுதர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
பெருமானாரோடு கொண்ட தொடர்பினால் அபுதர் ரலி போன்ற எத்துனை ஸஹாபிகள் இந்த பலனை அடைந்திருப்பர். பெருமானாருடைய காலத்தில் இருந்தும் நல்ல தொடர்பு இல்லாமல் போனதால் எத்தனை நபர்கள் இந்த அளப்பெரும் பாக்கியத்தை இழந்திருப்பர். குர்ஆனில் எத்தனையோ நபிமார்களின் வரலாற்றை குறிப்பிடும் போது அந்த நபியின் வாழ்க்கையின் துன்பங்கள், துயரங்கள், இன்பங்களைப் பற்றி குர்ஆன் பேசுமே தவிர அந்த நபி எப்படி நடந்தார், எப்படி அமர்ந்தார் என்று குர்ஆன் பேசியதில்லை. ஆனால் ஓர் இடத்தில் மட்டும் பேசப்படுகிற நாயைப் பற்றி குர்ஆன் பேசும்போது அதனுடைய இருப்பு எப்படி இருந்தது என்பதை விவரிக்கின்றது. ஏன் இநதளவிற்கு அழுத்தமாகப் பேசப்பட வேண்டும். பத்தோடு பதினொன்றாக முடித்திருக்கலாமே, காரணம் அந்த நாய் நல்லோர்களுடன் கொண்ட தொடர்பு.
இத்தகைய தொடர்புகளால் தான் அல்லாஹ்வுடை பொருத்தத்திற்கும், நேசத்திற்கும் சொந்தக்காரர்களாக ஆகுவோம் என்பதைவிட அவனைப் பற்றிய ஞானத்தையும், நம்மை அழித்து அவனைப் பார்க்குகின்ற நிலையும் நமக்குள் உருவாக வேண்டுமானால் நாம் நல்லோர்களோடு தொடர்புகொள்வோம்.

0 comments: