Slide 1 Slide 2 Slide 3 Slide 4 Slide 5
Posted by ஆஷிக் மிஸ்பாஹி | 0 comments

இஸ்லாமின் மரியாதை



فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ(30)
ஒரு காலத்தில் மார்க்கம்  என்பது  தியாகத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் பெயராக இருந்தது.
மக்கா வாழ்க்கையில் இஸ்லாத்தை வெளிப்படுத்தினாலே அடி உதை தான்.
அபூ தர் (ரலி)அவர்களின் இஸ்லாமிய அனுபவம்
قَالَ أَبُو ذَرٍّ كُنْتُ رَجُلًا مِنْ غِفَارٍ فَبَلَغَنَا أَنَّ رَجُلًا قَدْ خَرَجَ بِمَكَّةَ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ فَقُلْتُ لِأَخِي انْطَلِقْ إِلَى هَذَا الرَّجُلِ كَلِّمْهُ وَأْتِنِي بِخَبَرِهِ فَانْطَلَقَ فَلَقِيَهُ ثُمَّ رَجَعَ فَقُلْتُ مَا عِنْدَكَ فَقَالَ وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَجُلًا يَأْمُرُ بِالْخَيْرِ وَيَنْهَى عَنْ الشَّرِّ فَقُلْتُ لَهُ لَمْ تَشْفِنِي مِنْ الْخَبَرِ فَأَخَذْتُ جِرَابًا وَعَصًا ثُمَّ أَقْبَلْتُ إِلَى مَكَّةَ فَجَعَلْتُ لَا أَعْرِفُهُ وَأَكْرَهُ أَنْ أَسْأَلَ عَنْهُ وَأَشْرَبُ مِنْ مَاءِ زَمْزَمَ وَأَكُونُ فِي الْمَسْجِدِ قَالَ فَمَرَّ بِي عَلِيٌّ فَقَالَ كَأَنَّ الرَّجُلَ غَرِيبٌ قَالَ قُلْتُ نَعَمْ قَالَ فَانْطَلِقْ إِلَى الْمَنْزِلِ قَالَ فَانْطَلَقْتُ مَعَهُ لَا يَسْأَلُنِي عَنْ شَيْءٍ وَلَا أُخْبِرُهُ فَلَمَّا أَصْبَحْتُ غَدَوْتُ إِلَى الْمَسْجِدِ لِأَسْأَلَ عَنْهُ وَلَيْسَ أَحَدٌ يُخْبِرُنِي عَنْهُ بِشَيْءٍ قَالَ فَمَرَّ بِي عَلِيٌّ فَقَالَ أَمَا نَالَ لِلرَّجُلِ يَعْرِفُ مَنْزِلَهُ بَعْدُ قَالَ قُلْتُ لَا قَالَ انْطَلِقْ مَعِي قَالَ فَقَالَ مَا أَمْرُكَ وَمَا أَقْدَمَكَ هَذِهِ الْبَلْدَةَ قَالَ قُلْتُ لَهُ إِنْ كَتَمْتَ عَلَيَّ أَخْبَرْتُكَ قَالَ فَإِنِّي أَفْعَلُ قَالَ قُلْتُ لَهُ بَلَغَنَا أَنَّهُ قَدْ خَرَجَ هَا هُنَا رَجُلٌ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ فَأَرْسَلْتُ أَخِي لِيُكَلِّمَهُ فَرَجَعَ وَلَمْ يَشْفِنِي مِنْ الْخَبَرِ فَأَرَدْتُ أَنْ أَلْقَاهُ فَقَالَ لَهُ أَمَا إِنَّكَ قَدْ رَشَدْتَ هَذَا وَجْهِي إِلَيْهِ فَاتَّبِعْنِي ادْخُلْ حَيْثُ أَدْخُلُ فَإِنِّي إِنْ رَأَيْتُ أَحَدًا أَخَافُهُ عَلَيْكَ قُمْتُ إِلَى الْحَائِطِ كَأَنِّي أُصْلِحُ نَعْلِي وَامْضِ أَنْتَ فَمَضَى وَمَضَيْتُ مَعَهُ حَتَّى دَخَلَ وَدَخَلْتُ مَعَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ لَهُ اعْرِضْ عَلَيَّ الْإِسْلَامَ فَعَرَضَهُ فَأَسْلَمْتُ مَكَانِي فَقَالَ لِي يَا أَبَا ذَرٍّ اكْتُمْ هَذَا الْأَمْرَ وَارْجِعْ إِلَى بَلَدِكَ فَإِذَا بَلَغَكَ ظُهُورُنَا فَأَقْبِلْ فَقُلْتُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَأَصْرُخَنَّ بِهَا بَيْنَ أَظْهُرِهِمْ فَجَاءَ إِلَى الْمَسْجِدِ وَقُرَيْشٌ فِيهِ فَقَالَ يَا مَعْشَرَ قُرَيْشٍ إِنِّي أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَقَالُوا قُومُوا إِلَى هَذَا الصَّابِئِ فَقَامُوا فَضُرِبْتُ لِأَمُوتَ فَأَدْرَكَنِي الْعَبَّاسُ فَأَكَبَّ عَلَيَّ ثُمَّ أَقْبَلَ عَلَيْهِمْ فَقَالَ وَيْلَكُمْ تَقْتُلُونَ رَجُلًا مِنْ غِفَارَ وَمَتْجَرُكُمْ وَمَمَرُّكُمْ عَلَى غِفَارَ فَأَقْلَعُوا عَنِّي فَلَمَّا أَنْ أَصْبَحْتُ الْغَدَ رَجَعْتُ فَقُلْتُ مِثْلَ مَا قُلْتُ بِالْأَمْسِ فَقَالُوا قُومُوا إِلَى هَذَا الصَّابِئِ فَصُنِعَ بِي مِثْلَ مَا صُنِعَ بِالْأَمْسِ وَأَدْرَكَنِي الْعَبَّاسُ فَأَكَبَّ عَلَيَّ وَقَالَ مِثْلَ مَقَالَتِهِ بِالْأَمْسِ قَالَ فَكَانَ هَذَا أَوَّلَ إِسْلَامِ أَبِي ذَرٍّ رَحِمَهُ اللَّهُ البخاري 3522
பின்னொரு காலத்தில் மார்க்கம் என்பது பின்பற்றுதலுக்கும் எடுத்துச் சொல்லுதலுக்குமான பெயராக இருந்த்து
மார்க்கம் என்ன சொன்னாலும் அதைப் பின்பற்றினார்கள். அது கசப்பாக தெரிந்தாலும் கூட..
திருமணம் நடந்து கொஞ்ச நேரத்தில் மண வாழ்க்கை தடுக்கும் ஒரு செய்திக்கு சஹாபாக்கள் கட்டுப்பட்டார்கள்.
عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عَزِيزٍ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ فَقَالَ لَهَا عُقْبَةُ مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي وَلَا أَخْبَرْتِنِي فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ فَسَأَلَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ وَقَدْ قِيلَ فَفَارَقَهَا عُقْبَةُ وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ- البخاري 88
தற்காலத்தில் மர்ர்கம் பெருமையடிப்பதற்கும் சொந்தம் கொண்டாடுவதற்குமான பெயராக மாறி விட்ட்து.
இன்றைய நம்முடைய வாழ்க்கையை கவனித்துப் பாருங்கள் முஸ்லிம் என்ற பெருமைக்கும் சிறுபான்மை என்ற சலுகைக்கும் நாம் எவ்வளவு ஆசைப்படுகிறோம். அந்த அளவிற்கு இஸ்லாமிய வாழ்க்கை ஆசைப்படுகிறோமா?
இது யூதர்கள் கிருத்துவர்களின் நடைமுறையாகும்.
மார்க்கத்தை பின்பற்றாமல் அதன் பெயருக்கும் பெருமைக்கும் சொந்தம் கொண்டாடுவது யூதர்கள் கிருத்துவர்களின் நடைமுறையாகும்.
யூதனாக இருந்தால் போதும் சொர்க்கத்திற்கு போய்விடலாம் என்று யூதர்கள் சொன்னார்கள்.
கிருத்துவனாக  இருந்தால் போதும் சொர்க்கத்திற்கு போய்விடலாம் என்று கிருத்துவர்கள் சொன்னார்கள்.
وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنتُمْ صَادِقِينَ(111)
அல்லாஹ் கூறினான்.
بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِنْدَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்டு( مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ ) உள்ளத்தூயமையோடு وَهُوَ مُحْسِنٌ – நடந்து கொள்பவர்களுக்குத்தான் சொர்க்கம் சொந்தம்.
தற்காலத்தில் இதை முஸ்லிம் சமுதாயம் மறந்து விடுகிறது. இஸ்லாமிய வாழ்க்கை இல்லாமல், உளத்தூயமையில்லாமல் இஸ்லாம் என்பது பெருமைக்கும் உரிமைக்குமான ஒரு கோஷமாக  மாறிவிட்ட்து.
நம்மை நாம் பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
தூய இஸ்லாத்தை பின்பற்றிய கூட்டம் எப்படி இருந்தது.
கஃபு (ரலி) நீதிமன்றத்தில் இரண்டு பேர் ஒரு வழக்கை கொண்டு வந்தனர். சாதரணமாக என்னுடையதை இவன் எடுத்துக் கொண்டான் என்று தான் வழக்குகள் வரும், அது ஒரு வித்தியாசமான வழக்காக இருந்த்து. ஈமானி வழக்காக இருந்தது.
தாபிஃகள் ஒருவர் நிலம் வாங்கினார். அதை தோண்டிய போது ஒரு புதையல் கிடைத்தது. நிலத்தை விற்றவரிடம் அதை கொண்டு போய் கொடுத்து இது உங்களுடையது என்றார். அவர் அதை ஏற்க மறுத்தார். நிலத்தை விற்ற போதே அதிலுள்ள அனைத்தும் உங்களுக்குரியதாகி விட்டது என்றார். இருவரும் புதையலை ஏற்க மறுத்தனர்.  
முதல் முஸ்லிம் சமுதாயம் எப்படி இருந்திருக்கிறது பாருங்கள்.
இறுதியில கஃபு (ரலி) அவர்கள் அவ்விருவரில் ஒருவரின் மகனுக்கு மற்றவரின் மகளை திருமணம் செய்து வைத்து புதையல் உங்களது குடும்பத்திற்குரியது என்று தீர்ப்பு செய்தார்கள்.  
இமாம் புஹாரியின் ஹதீஸை தேடும் பணியில் கப்பலில் பயணம் செய்தார். 6 ஆயிரம் தீனாரை ஒரு பையில் போட்டு வைத்திருந்தார். அவருடைய சக பயணி ஒரு வருக்கு அது தெரிந்துவிட்ட்து. அவர் அதை தனதாக்கி கொள்ள நினைத்தார். கப்பல் சிப்பந்திகளிடம் சென்று என்னுடைய ஆறாயிரம் தீனார் காணாமல் போய்விட்ட்து என்று புகார் செய்தார். கப்பல் சோதனையிடப்பட்டது. யாரிடமும் அந்த பை இருக்க வில்லை. கொள்ளையிட நினைத்தவருக்கு ஏமாற்றமாகிவிட்டது. கப்பலிலிருந்து இறங்கும் போது இமாம் புஹாரியிடம் மன்னிப்பு கேட்டார். அவர் மன்னித்தார்.
பின்னாலேயே வந்த அந்த மனிதர் அந்தப் பை என்னவாயிற்று என்று கேட்டார்.   இமாம் புஹாரி சொன்னார். கப்பல் சிப்பந்தியின் அறிவிப்பை கேட்ட்துமே உங்களது திட்டம் எனக்கு புரிந்து விட்டது. இந்தப் பணத்தை என்னுடையது என்று நிரூபிக்க என்னிடம் போதுமான ஆதாரம் இல்லாத நிலையில் பணம் என்னிடமிருப்பதை அவர்கள் அறிந்தால் என்னை திருடன் என்றும் பொய்யன் என்றும் சொல்லிவிடுவார்கள். நான் ஒரு ஹதீசை திரட்டுகிற பணியில் இருக்கிறேன். இப்படி ஒரு பெயருக்கும் சற்றும் ஆளாக விரும்பவில்லை; அதனால் அந்தப் பணத்தை கடலில் வீசிவிட்டேன் என்றார்.
தன் மீதான நல்லெண்ணத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தனது பெருந்தொகை அர்ப்பணித்தார் இமாம் புஹாரி.
இஸ்லாமிய வாழ்வியலியலின் மரியாதைக்கு மற்றொரு சான்று இது.
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியிருந்த யூதன் ஒருவன் தனது வீட்டை இரண்டாயிரம் தீனாருக்கு விலை பேசினான. வாங்க வந்த ஒருத்தர் கேட்டார். இந்த வீட்டின் மதிப்பு ஆயிரம் தீனார் தானே? ஏன் அதிகமாக கேட்கிறாய்?
யூதன் சொன்னான் வீட்டின் மதிப்பு அவ்வளவு தான். ஆனால் என்னுடைய பக்கத்து வீட்டுக்கார்ர அப்துல்லாஹ் பின் முபாரக் அல்லவா?
ஒரு முஸ்லிமுக்கு பக்கத்தில் இருப்பதே மரியாதைக்குரியதாக இருந்த்து.
காரணம் என்ன வெனில் அவர்களிடம் இஸ்லாம் வாழ்க்கையாக இருந்தது. உள்ளச் சுத்தத்தோடு இருந்த்து.
இன்றைய காலத்தில் இஸ்லாம் வெறும் பெய்ரக இருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் தங்களது இஸ்லாமின் மரியாதையை மறந்து மார்க்கத்திற்கு பொருந்தாத – மார்க்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துகிற வேலையை செய்கிறார்கள்.
பிறகு இஸ்லாம் என்ற பெயரில் ஒன்று கூடுகிறார்கள்
முஸ்லிம்கள் அவர்களுக்கு தகாத வேலையை செய்யக் கூடாது. ஒரு வேலை அப்படிச் செய்ய நேர்ந்தால் அதில் இஸ்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது.  
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ  رواه الترمذي 2239
தேவையில்லாத இஸ்லாமின் மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்த்துகிற இடங்களில் ஒரு கண்ணியமான முஸ்லிம் இருக்க கூடாது.
இப்னு மஸ்வூத் (ரலி) ஒரு இட்த்திற்கு சொன்று சென்றார். அங்கு சிலர் சூதாடிக் கொண்டிருந்தார்கள் . அதைப் பார்த்த்தும் அங்கிருந்து இறங்கி நடந்தார் அவர். இதை அறிந்த பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். مر كريما  
பிற்கு திருக்குர்ஆனில் புர்கானில் வருகிற وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا(72) என்ற வசனத்தை ஓதினார்கள்
யூதர்களை போல கிருத்துவர்களைப் போல நாம் முஸ்லிம் என்ற பெயருக்கு சொந்தம் கொண்டாடக் கூடாது.
மரியாதையான மார்க்கத்தின் சொந்தக்கார்ரர்களாக எல்லா இட்த்திலும் மரியாதையாக நடந்து கொள்ளனும்.
எனக்கு தெரிந்த ஒருவர் தந்து சம்பந்தியை சந்திக்க அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஒரு ரெஸ்டாரண்டில் உணவருந்தச் சென்ற போது அவரது சம்பந்தியின் கோட்டில் சர்வர் உண்வை கொட்டி விட்டார். இதைக் கண்ட அவரது மகன் சர்வரிடம் கோபித்த போது அந்த சம்பந்தி சொன்னார். சப்தம் போடாதே! நாம் முஸ்லிம் தோற்றத்தில் இருக்கிறோம். நமது பெண்கள் புர்கவோடு வந்திருக்கிறார்கள். இந்த இட்த்தில் இஸ்லாத்தின் மரியதையை நாம் பற்றினால் இந்த சர்வருக்கு மட்டுமல்ல இங்குள்ள அனைவருக்கும் இஸ்லாத்தின் மீது மரியாதை பிறக்கும் என்று சொன்னாராம்.
என்னால் மறக்க முடியாத நிகழ்வு இது   இஸ்லாமிய வாழ்க்கை வேண்டும் என்று ஆசைப்படுகிற அனைவரிடமும் இருக்க வேண்டிய பொறுப்புணர்வு இது.
ஆனால் இன்றைய சூழல் எப்படி இருக்கிறது.
எங்களது ஊரில் முஸ்லிம் மஹல்லாவில் நடைபெற்ற இந்துக்களின் திருமண வீட்டில் போய் மூன்று பேட் சீட்டாடி தக்றாறு வளர்த்திருக்கிறார்கள். அதில் சண்டை மூண்டிருக்கிறது. அதைக் கேட்க சிலர் சென்றுள்ளார்கள். தகறாறு பெரிதாகி விட்ட்து. காவல துறை 13 பேரை கைது செயத்து. அதை கண்டித்து முஸ்லிம்களில் ஒருசிலர் ரோட்டை மறித்து மறியல செய்தார்கள். ரோட்டிலேயே தொழுதார்கள்.
அது இன்று வரை தீராத பெரும் பிரச்சனையாகி இருக்கிறது.
கோவை மாநாகரின் அமைதிக்கா துஆ செய்யுங்கள்.
மார்க்கத்தை பலரும் கடந்த காலங்களில் சண்டைக்கும் ச்ச்சரவுக்கும் மோதலுக்கும் வீண்வாதங்களுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பெருமானார் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையை நாம் மறந்து விடக்கூடாது.
عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ قَالَ قَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ إِذَا حَدَّثْتُكُمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَأَنْ أَخِرَّ مِنْ السَّمَاءِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَكْذِبَ عَلَيْهِ وَإِذَا حَدَّثْتُكُمْ فِيمَا بَيْنِي وَبَيْنَكُمْ فَإِنَّ الْحَرْبَ خَدْعَةٌ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَأْتِي فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ حُدَثَاءُ الْأَسْنَانِ سُفَهَاءُ الْأَحْلَامِ يَقُولُونَ مِنْ خَيْرِ قَوْلِ الْبَرِيَّةِ يَمْرُقُونَ مِنْ الْإِسْلَامِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنْ الرَّمِيَّةِ لَا يُجَاوِزُ إِيمَانُهُمْ حَنَاجِرَهُمْ فَأَيْنَمَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ فَإِنَّ قَتْلَهُمْ أَجْرٌ لِمَنْ قَتَلَهُمْ يَوْمَ الْقِيَامَةِ
அலீ(ரலி) அறிவிக்கிறார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நபி அவர்களின் மீது பொய் சொல்வதை விட நான் வானத்திலிருந்து கீழே விழுந்து விடுவதை நான் விரும்புவேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்
 “இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். (வேடன் எறிந்த) அம்பு வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து  அவர்கள் வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது.." என்று கூறினார்கள்.
 நூல் ;புஹாரி.3611)
இஸ்லாம் உன்னதமான மார்க்கம். உயர்ந்த வாழ்க்கை மதிப்புக்களை கற்றுக் கொடுத்துள்ள மார்க்கம். இஸ்லாமிய வழிப்படி வாழும் எவரையும் உலகம் விழி உயர்த்திப் பார்க்கும்.
நாம் அந்த மார்க்கத்தின் சொந்தக்கார்ர்கள் என்ற வகையில் மரியாதைக்குரியவரகளாக வாழ வேண்டும். வாழ முயற்சி செய்ய வேண்டும்.
அதன் பிறகு நான் ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால் அது அழகானது.
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنْ الْمُسْلِمِينَ(3341;
இஸ்லாமிய வாழ்க்கை இல்லாமல் – குணமும் இல்லாமல் நடந்து கொண்டு தேவைக்கும் பெருமைக்கும் இஸ்லாம் என்ற வார்த்தை பயன்படுத்தினால் அது நன்மைக்கு வழி வகுக்காது.
அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக!
ஒவ்வொரு பகுதியிலும் இப்படி இஸ்லாம் என்கிற உன்னதமான அடையாளத்தை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்துகிறார்கள். முஸ்லிம்கள் அத்தகைய நபர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தை பாதுகாப்பானாக!
Read more...
Posted by ஆஷிக் மிஸ்பாஹி | 0 comments

தெளிவும் பண்பாடும் மிக்க இளைஞர்கள் தேவை

இன்றைய முஸ்லிம் உலகில் இளைஞர்களின் எண்ணிக்கை பரக்கத்தாக இருக்கிறது. 
எந்த அமைப்பிடமும் குறைந்தது 500 இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒரு எஸ் எம் எஸ்ஸில் திரள்கிறார்கள். கோஷமிடுகிறார்கள். போராடுகிறார்கள். வலிமையை காட்டுகிறார்கள்.
இளமையின் முக்கியத்துவம் அது எப்படி பயன்பட வேண்டும் இப்போது எப்படி பய்ன்பட்ட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இன்றைய ஜும் ஆவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
இளமை என்பது ஒரு அற்புதமான சக்தி. இந்த உலகில் நடை பெற்ற எந்த ஒரு புரட்சியும் சமூக மாற்றமும் மறுமலர்ச்சியும் இளைய சக்தியினாலேயே சாத்தியமாகி இருக்கிறது.
நபி இபுறாகீம் (அலை) அவர்களின் புரட்சிகர வாழ்வை அல்லாஹ் அறிமுகப்படுத்துகிற போது அவரை இளைஞர் என்கிறான்
Read more...
Posted by ஆஷிக் மிஸ்பாஹி | 0 comments

இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை

பொருளாதாரம் அல்லது பொருளியல் (Economics) என்பது, தவிர்க்க முடியாத ஒரு கலை ஆகும். பொருளியல் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். ஏனெனில், பொருளியலுக்கு இலக்கணம் கூறுவதிலேயே பொருளாதார மேதைகள் தடுமாறுகின்றனர்.

ஸ்காட்லாந்த் நாட்டைச் சேர்ந்த பொருளாதார மேதையாகக் கருதப்படுபவர் ஆடம் ஸ்மித் (1723 - 1790). இவர், முறைப்படுத்தப்பட்ட விரிவான பொருளாதாரக் கோட்பாட்டை முதன் முதலில் உருவாக்கியவர் என்று சொல்லப்படுகிறது.

பொருளியலை "செல்வக் கலை' என வர்ணிக்கும் ஆடம் ஸ்மித், "மனித சமுதாயத்தைச் செல்வச் செழிப்பு மிக்கதாக மாற்றுவதற்கு வேண்டிய வழிமுறைகளைச் சொல்லும் கலையே "பொருளியல்' ஆகும்'' என்கிறார்.
இங்கிலாந்து நாட்டின் பொருளாதார நிபுணர் ஆல்ஃபிரட் மார்ஷல் (1842 - 1924),
Read more...
Posted by ஆஷிக் மிஸ்பாஹி | 0 comments

முஸ்லிம்களின் அடையாளங்களில் ஒன்று தன்னம்பிக்கை

முஸ்லிம்களின் அடையாளங்களில் ஒன்று தன்னம்பிக்கை
நேற்று பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வந்தன. இதனால் பல மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் சந்தோஷம் அடைந்தாலும் சில மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சித்தார்கள் அதில் சிலர் மரணித்தும் போனார்கள் என்பது செய்தித்தாள் மூலமாக நாம் அறியவரும் செய்தி. தேர்வு முடிவுகள் வந்தாலே அடுத்த நாள் செய்தித்தாள்களில் இது போன்ற தற்கொலை சார்ந்த செய்திகள் வருவது வழக்கமாக மாறிவிட்டது.
ஆனால் இஸ்லாம் முதலில் தற்கொலைக்கு முதல் எதிரி. சொல்லால் மட்டும்  அல்ல அதற்குரிய தடுப்பு வழிகளையும் முன் எச்சரிக்கை வழிகளையும் சொல்லிகாட்டியிருக்கிறது. இது சார்ந்த விழிப்புணர்வுகளையும் தெளிவுகளையும் ஆலிம் சமுதாயம்
Read more...
Posted by ஆஷிக் மிஸ்பாஹி | 0 comments

உயர் கல்வி சில யோசனைகள்

يَرْفَعْ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ 58:11
தமிழகத்தில் 12 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மொத்த்தில் 88 சதவீத மாணவர்கள் வெற்றியடைந்துள்ளனர்.
வெற்றி பெற்ற் மானவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ஜெயசூரியா  என்ற  ஏழை மாணவன் மாநிலத்தில் முதலிடம் பெற்றிருக்கிறான். அவனுடைய தந்தை சம்பாதிக்க இயலாதவர். நகரட்சிப் பள்ளியில் 8 ம் வகுப்பு வரை படித்த அந்த மாணவன் நன்றாக படிக்கிறான் எப்பதால் தனியார் பள்ளிக் கூட நிர்வாகிகள் அவனுக்கு உதவியுள்ளனர். இன்று அந்த மாணவனால் அந்தப் பள்ளிக் கூட்த்திற்கும் அந்த மாவட்டத்திற்குமே பெருமை கிடைத்துள்ளது.
Read more...
Posted by ஆஷிக் மிஸ்பாஹி | 0 comments

மெய்ஞானத்தை அடைய வழி?

அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் நாம் அவனோடு இருக்கிறோம் இதை அறிந்து உணர்ந்து அனுபவித்து வாழ்வது தான் மெய்ஞான வாழ்க்கை. ஒருவர் எல்லாம் பெற்றார் ஆனால் மெய்ஞானம் பெறவில்லை என்றால் அவர் எதையும் பெறாதவரைப் போனாறாவார். இன்னொருவர் மெய்ஞானம் பெற்றார் வேறெதையும் பெறவில்லை என்றாலும் அவர் எல்லாமும் பெற்றவரைப் போன்றவர் என்று இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

மெய்ஞானம் இல்லாத மனிதன் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற இயலாது. மேலும் அல்லாஹ்வின் உஜுத் எனும் உள்ளமையிலும் சிபாத் எனும் தன்மைகளிலும் அல்லாஹ்வுடன் கூட்டாகி ஷிர்க்கே கஃபிய்யி செய்கிறான்.

அதனால் தான் யார் மார்க்கச் சட்ட திட்டங்களைப் படித்துவிட்டு மெய்ஞானம் படிக்கவில்லையோ அவர் ஜின்தீக் வழிகெட்டவராகிவிட்டார். யார் மெய்ஞானம் படித்துக் கொண்டு போதுமான அளவுக்கு மார்க்கச் சட்டதிட்டங்களைப் படிக்கவில்லையோ அவர் பாவியாகிவட்டார் என இமாம் மாலிக் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். அல்மிர்காத் ஷரஹுல் மிஷ்காத்
Read more...
Posted by ஆஷிக் மிஸ்பாஹி | 0 comments

ஊர்மானமத்தை கப்பலேற்றும் ஐநாவின் தீர்மானம்!

கடந்த மார்ச் 4-15இல் ஐநா சபையின் பெண்களுக்கான ஆணையம்(Commission On the Status of Women-CSW 57) ‘‘பெண்கள் மற்றும் யுவதிகளுக்கெதிரான அனைத்து வகைக் கொடுமைகளையும் தடுத்து நிறுத்தல்’’(Elimination and prevention of all forms of violence against women and girls) என்ற பெயரில் ஓர் தீர்மானத்தை வெளியிட்டு அரபு நாடுகளில்  சர்ச்சையை கிளப்பியது. வழக்கம் போல் ஊடகங்களின் இருட்டடிப்பால், ஒரு சார்பு போக்கால் இந்தியா போன்ற முஸ்லிம்கள் குறைவாக வாழுகிற பகுதிகளில் செய்தி என்னவென்றே தெரியவில்லை. பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்மையை பாழ்படுத்துகிற 9அம்ச தீர்மானத்தை ஐநா நிறைவேற்றியுள்ளது. முழுக்க முழுக்க மேற்கத்திய அநாச்சாரத்தை விதைப்பதற்கு தொடுக்கப்பட்டுள்ள முயற்சியே இந்த தீர்மானம். ஒரு பக்கம் நாகரீகத்தையும், பண்பாட்டையும் குழிதோண்டி புதைக்கும் முகமாகவே இத்தீர்மானம் அமைந்திருந்தாலும் மறுபக்கம் இது இஸ்லாத்தை குறிவைத்து தொடுக்கப்படுள்ள தீர்மானமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை பலமாக கிளப்புகிறது. ஆறு அறிவு படைத்த மனிதனின் சிந்தையில் இப்படியோரு களிசடைகளும் உதிக்குமோ என்று விந்தையாக இருக்கின்றது. சரி அப்படி என்னதான் அந்த தீர்மானம் ஒப்பாரி வைக்கிறது என்று நினைக்கிறீர்களா... இதோ
Read more...